Saturday, March 31, 2012

மானம் கெட்ட மானிடர்களுடன் மூன்றாம் பருவம்


வந்தாச்சு வந்தாச்சு நாங்க பாலை வனத்துக்குள்ள  வந்தாச்சு,   தாவணி கனவுல  கூட இனி  வராது ( வந்துட்டாலும் ..)  திரும்புற இடம் எல்லாம் மொக்க பசங்களும் பக்கி பெருசுகளும் ( வாத்தியார் ) தான் . அடுத்த மூன்று ஆண்டுகள் இந்த ஜெயில் தான் என நினைத்து நினைத்து விம்மினேன். வெளில தான் மெகானிகல் னா மாஸ் னு படம் போடுவோம் அனால் உண்மையா பெரு மூச்சி தான் விடுவோம். இந்த மூன்றாம் பருவத்துல இருக்குற பிரட்சன போதாதுன்னு புதுசா சில பிரச்சனைகள் வந்து சேந்துசுங்க. அவங்களுக்கும் கழுத ஒரு அறிமுக விழா எடுத்து தொலைவோம்.

முதல்ல அறிமுக படுத்தறது சபை தலைவர். தாத்தா வயசு இருந்தும் அவர நாங்க மாமானு செல்லமா கூப்பிடுவோம். மனுஷன் எத பத்தியும் கவலை பட மாட்டாரு . பால்டேக்க்னிக் எப்படியோ காசு கொடுத்து டிகிரி வாங்கிட்டு இப்போ பெரிய படிப்பு படிக்கணும் என்று ஒரு ஆர்வதுள்ள வந்துட்டாரே தவிர பாடம்னு வந்துட்டா பத்து அடி தூரம் தள்ளி தான் நிப்பாரு. இவரோடு கணினி அறிவ பத்தி நான் சொல்லியே ஆகணும் . கடைசி பருவத்தின் இறுதியில் அவர்கிட்ட ஒரு பாரத்தில்  அவருடைய ஈமேல் அட்ரஸ் எழுதி கேட்டோம் , அவர் அதற்க்கு " விடு மக்கா இப்போ நா அதெல்லாம் செக் பண்றது இல்ல" னு சொன்னாரு. நாங்க விடாபிடியாய் இல்ல மாமா இப்போ இல்லனாலும் பின்னாடி தேவை படும் சொல்லுங்க என்று சொன்னோம் , அவரு ஸ்டார்வின் ஜியோ  னு  போட்டுக்கோ மக்கா னாரு . நாங்க உடனே புல் அட்ரஸ் சொல்லு மங்கு மாமா என கேட்டோம். உடனே அவரு " டபிள்யு டபிள்யு டபிள்யு டாட்  ஸ்டார்வின்ஜியோ டாட்  காம்  என்று சொன்னார் . நம்ம பில் கேட்ஸ் கூட இப்படி ஒரு மெயில் அட்ரஸ் வச்சதில்ல . நான்கு வருடம் இவரு எப்படி படித்திருகார்னு அப்போ பாத்துகோங்க .
நம்ம மாமா சும்மா இருந்தாலும் அவரு கூட இருக்குறவன் சும்மாவே இருக்க மாட்டான் . பேரு சக்கரை வாசன் , மாமா ஓட ரைட் ஹன்ட்,  லெப்ட் ஹன்ட் எல்லா  ஹன்டும் சார் தான் . சார் கிட்ட ஏதாவது பேசுனா பத்து ஊருக்கு பஞ்சாயத்து தலைவர் மாதிரி பேசுவார் . ஆனா செலவு செயுற பத்து ரூபாய் கூட மாமா பாக்கெட்ல இருந்து தான் எடுப்பார் .


இவன கூட மன்னித்து விட்டுடலாம் என்னும் சில கேரக்டர் வந்து சேந்தாங்க பாருங்க , புள்ளி னு ஒருத்தன் வந்தான் தரித்திரம் புடிச்சவன் . மெக்கானிகல் மானத்தையே வாங்கிட்டான் . காலேஜ் ல ஒரு பொன்னையும் விடல . தொரத்தி தொரத்தி கடலை போட்டான். என்ன தான் மானம் கெட்டு திட்டு வாங்கினாலும் கண்டுக்காத ஜென்மம் . சொரனையே இல்லாம " ஹலோ என்ன நேத்து காறி துப்பினது நீங்க தான , இன்னைக்கும்  துப்புவீங்களா" னு இத கூட சாக்கா வச்சி கடலை போடுவான் . எதையும் தானா ஆட்ட முடியாது . அத மாதிரி இவன் ஆடுறதுக்கு காரணம் ஒருத்தன் இருந்தான் . அந்தோணி மாக்கான், நான் அவன மாக்கான் சொன்னாலும் உண்மையில் அவன் தான் ஊர்ல இருக்கிறவங்க எல்லாத்தையும் மாக்கான் ஆக்கிட்டு அவன் குஜாலா இருப்பான். அவன்கிட்ட எங்க குத்து விளக்கு பட்ட பாட்டை சொலனும்னா அதுக்கு நாலு எபிசொட் தனியா எழுதணும் . புள்ளி கிருஷ்ணாவ  லூசா அலையவிட்டது இவன்னா , அவன குழிதோண்டி மண்ணுல புதச்சவன் ஒருத்தன் இருக்கான்,


 தினமும் ஒரு நூற்று முப்பது கிலோ தூக்குவான் . அட அவன் வெயிட்ங்க அது . கண்ணு எங்கயாவது வளைவு தெரியாதானு துரு துருனு பார்த்துகிட்டே இருக்கும்  , காது கிசு கிசு கேட்கரதற்கு மட்டும் வச்சிருப்பான் . எவனாது ஒருத்தன்  நல்ல இருந்தான பொறுக்காது  வயிறு எறிஞ்சிடும் ,வாய திறந்தா அடுத்தவன் டர்ரு தான் , இவன ஒரு நடமாடும் பீடையாவே எல்லோரும் பார்த்தாங்க . பண்ணி தம்புனு எல்லோரும் கூப்பிடுவாங்க . அது என்னமோ "பண்ணினா" இங்கிலாந்துல கொடுக்கிற 'சர்' பட்டம் மாதிரி இவனுக்கு ஒரு பெருமை . இவனோட  முக்கியமான கரக்டேர் என்னன்னா ,  அவன் காலேஜ்ல படிக்கிற எந்த பொன்னையும் பாக்கமாட்டான்.  அதுக்காக அவன யோக்கியன் மட்டும் நினச்சிடாதீங்க . பக்கிக்கு ஆண்டியோபோபியா . " மச்சி ஈஸ்ட் ஓர் வெஸ்ட் ஆன்டி இஸ் தி பெஸ்ட் " அப்டின்னு கேவலமா , கூட்டி சுத்தம் செய்றவங்க , ஆயா , சில சமயம் பாட்டி இப்படி பட்டவங்கள மட்டும் தான் மனதார பார்பான் . இவன் நம்பினு ஒரு அம்பி பயல கேர்ள் பிரிண்டா மாதிரி வேற வச்சிருந்தான் . கலி முத்திடுச்சுனு இவன பாத்தா சொல்லலாம்.
இந்த கருவாயன் கருவினால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம்  பார்க்கலாம். கருவாயன் தம்புக்கு சுட்டு போட்டாலும் பாடம் ஏறாது. அவன் வாழ்க்கை சி பீ எஸ் ஈ வில் தொடங்கி மெட்ரிக் பார்த்து..  ஸ்டேட் போர்டில் படி ஏறி, பால் டெக்னிக்கையும்  கடந்த வாழ்கை . அவன் டிகிரி வாங்கினால் ஊரில் விழா எடுத்து கொண்டாட காத்து கிடந்தனர் . அவ்ளோ அறிவு . இவனுக்கு காலேஜ் மேன்டோர்  ஒருத்தர் இருந்தார். அவர் அவனை கூபிட்டு நீ ஏன்பா இவ்ளோ தத்தியா இருக்க , இந்த பாலாஜி , சீனி , கிருஷ்ணா ஓடெல்லாம்  சகவாசம் வச்சிக்காத. கே எஸ் , ரவி போல உள்ள படிக்கிற பசங்களோட மட்டும் சேந்து படி , கொஞ்சமாவது உருப்படுவ என சொனார் . நல்லவனா இருந்தா இவன் அப்படி செஞ்சுருப்பன் . நாசமபோனவன் தான இவன் , என்ன செஞ்சான் தெரியுமா ,தினமும் ஒரு நூறு தடவ " இறைவா நான் இந்த செமஸ்டர்ல ஒரு எக்ஸாம் கூட  பாஸ் ஆகலனாலும் பரவாஇல்ல , ரவிய மட்டும் ஒரு எக்ஸாம்லயாவது பெயில் ஆக்கிடு அப்போ தான் என் மனசுக்கு நிம்மதி என்றான் ". அசிங்க புடிச்சவன் நினச்ச மாதிரியே ரவி அந்த பரிட்சைல பெயில்ஆக பண்ணி குட்டி தம்பு அதுல பாஸ் ஆய்ட்டான்!!  அவ்ளோ கிரகம் பிடிச்ச சகுனி அது.


கடைசியா ஒருத்தனா பத்தி மட்டும் சொல்லிடுறேன் இல்லேனா " இவன்  லேட்ரல் என்ட்ரி னா பார்சியாளிட்டி பாக்றான் டா " னு ஒரு தேசிய பிரச்சனைய கொண்டு வந்துடுவான், அதனால அந்த தறுதலை பற்றியும்  கொஞ்சம் பாக்கலாம் .  " நாலு பேருக்கு நம்மளால கெட்டது நடக்துன்னா எதுவும் தப்பில்ல " என்ற ஒரு உரிய கொள்கை  வச்சிகிட்டு நம்ம உயிரை எடுத்திட்டு இருந்தான் .மனசுல கமல்ஹாசன்னு நினைப்பு வேறு . எங்க குத்து விளக்கு கூட அவர தான் பாக்குதுன்னு பிரம்மை வேறு .புகைச்சல் , செத்த நாயே , மங்கு  என்ற சொற்களுக்கு சொந்தக்காரன் . கொடீஸ்வரனாய் இருந்த கஞ்ச பயல் .தம்பு மேல அளவு கடந்த பாசம் வேற வச்சிருந்தான் . அவனுக்கு எதாவது ஒரு கேடு வந்திருச்சுனா எங்களுக்குலாம் ட்ரீட் கொடுத்து துக்கம் அனுசரிப்பான். அம்புட்டு நல்லவன்.
நான் அந்த வருடம் விடுதியில் இருந்து வெளியேறி தனியாக வீடு எடுத்தோம் . ராஜேஷ் , தம்பு , ரமேஷ் எனக்கு அபீசியல் ரூம் மேட் ஆனார்கள் . பாலாஜி அன்அபீசியல்  ரூம்மேட்ஆக எங்கள் ரூமில் தஞ்சம் புகுந்தான் . இந்த நல்லவன் எப்படி கடலை போடுவான்னு  ஒரு சின்ன விஷயத்த வச்சி பாக்கலாம். ரூம்ல எப்பவுமே வந்து யாரோடாவது போன்ல  கடலை போட்டுடே இருப்பன். இப்படி ஒரு நாள் பயங்கர சந்தோஷமா சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருந்தான். இந்த பக்கிய எந்த லூசு பேசுதுனு  எனக்கு ஒரு பொறாமை . அவன் பேசிட்டு இருக்கும் போதே போன வாங்கி காதில் வச்சேன் " மயிறு , மூடு , வாய கிளிச்சுடுவேன் " என்று ஏக வசனத்தில் ஒருத்தி கத்தி கொண்டிருந்தாள். ஆம்புல குரலோட கலந்த பொம்பள குரல் அது . பேசிய விதத்தில் இருந்து அவள் எவ்வளவு சூடாக  இருக்கிறாள் என புரிந்தது . இவனோ பயங்கர கூலா " மச்சி ஏன் ஆளு என்ன சொல்றா , செம ஹாட்ல" என சொன்னான். எனக்கு தெரிஞ்ச எல்ல கெட்ட வார்த்தைகளையும்  சேர்த்து வச்சி அவன திட்டினேன் அவனோ " மச்சி உனக்கு என்னும் அவ அளவுக்கு திட்ட தெரியல , ப்ராக்டிஸ் பத்தல " என்றான் மனம் கெட்ட பயட்ட பேசுனா நமக்கு தான் கேவலம்னு வெளியே ஓடி  வந்துட்டேன் . இவ்ளோ அவமானத்தையும் தாங்கி கொண்டு கடலை கண்டிப்பா போடுனுமா?


இந்த கலுசடைகள்லாம் இந்த பருவத்துல வந்ததால , இத தவிர எனக்கு பெருசா வேற ஒன்னும் நியாபகம் இல்ல . இருண்டு வாரம் லீவ் போட்டு யோசிச்சும் பயன் இல்ல. அதனால இந்த வார கட்டுரைய இதுக்கு மேல எழுத முடியாம இதோட நிறுத்துகிறேன் . மற்றவை அடுத்த வாரம் பாக்கலாம்.


2 comments:

vinoth said...

dei nee enga mamavaa ipadillam kalaikikka kudathu...avaru nammakkuy ellam mama

Rajesh said...

Siva, Thambu va describe super ah paninina :-) Expecting more & more interesting stories..