கோடி விந்துவில் போட்டி போட்டு வெற்றி பெற்ற பூரிப்பை விட அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தேன் . கல்லூரி வாழ்வின் முதல் நாள். மகிழ்சிக்கு முக்கிய காரணம் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கலித்து பெண்டிர் உடன் மீண்டும் வகுபறையை பகிர்ந்து கொள்ளும் திருநாள் என்பதால் அந்த மகிழ்ச்சி . பணிரெண்டாம் வகுப்பில் அருகில் உள்ள மாணவன் தயவால் ஆயிரத்து நூறு மதிப்பெண் எடுத்தும் , அரசின் கொள்ளைகார புத்தியினால் கண்டுபிடிகப்பட்ட நுழைவுத்தேர்வில் நுழைய கூட வலி இல்லாமல் மாட்டிகொண்டு , என் கனவை அம்பானியிடம் இருந்து பிலானிக்கும் பின் பிலானிடம் இருந்து ஆர் ஈ சி கும் கடைசியில் பெயர் அழவாது பொருந்தும் என் ஈ சி என்ற கல்லூரியில் நான் பேமென்ட் எனப்படும் லஞ்சத்தின் மூலமாக வாய்ப்பு பெற்றேன் . நான் சேர்ந்தது பத்தாது என்று பள்ளி வகுப்பு தோழர்கள் செந்தில் , ரமேஷ் இருவரையும் மூளை சலவு செய்து சேர சொன்னேன் . அவர்கள் கலி காலம் அவர்களும் ஏதோ கற்பனைகள்ஓடு சேர்ந்தார்கள் . செந்தில் மட்டும் விவரமாய் கணினி துறை தேர்ந்தெடுத்தான் .எங்கள் இருவருக்கும் அப்போது அவ்வளவு விவரம் பத்தவில்லை .
கல்லூரியை நான் தேர்ந்து எடுத்ததிற்கு முக்கியமான காரணம் , நான் இருபது ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் அருகில் இருப்பதாலும் தென் தமிழகத்தில் நாங்கள் தான் சிறந்த கல்லூரி என்ற பீத்திகொண்டதாலும் அல்ல. கல்லூரி இருந்த ஊரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்று என் நண்பன் ஒருவன் சொன்ன பொய் கூற்றை ஏற்று இக் கல்லூரியில் சேர வேண்டும் என்று அடம் பிடித்து சேர்ந்தேன்.
என் ஈ சி கல்லூரி என்னை ஈசி ஆக வரவேற்கவில்லை. முதல் நாள் கல்லூரியில் பெயர் பிரகாரம் வகுப்பு பிரிப்பார்கள் என்று சொன்னார்கள் . எனக்கு பள்ளி நாட்களில் ஒரு வசதி இருந்தது. என் பெயர் 'சி' வில் ஆரம்பிபதால் தனியாக சிந்திக்க வேண்டாம் , 'அ' வில் வரும் மாணவனை கேள்வி கேட்க தொடங்கும் பொது , என் ரெகார்ட் நோட்டிலும் , ஒதுக்கீட்டுக் கணக்கு ( அசின்மென்ட் ) பாகங்களில் 'ஆ' எழுத ஆரம்பித்தால் போதும் . எந்த சண்டாளன் இதற்கு சூனியம் வைத்தானோ தெரியவில்லை 'எப்' வகுப்பில் இரண்டாவது மாணவன் பெயர் ஆக எனது பெயர் இருந்தது. இனி நாம் தான் அனைவர்க்கும் முன் உதாரணமாய் இருக்க வேண்டும் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் . செந்தில் 'ஈ 'ஆடிகொண்டிருகும் ஈ பிரிவிலும் ரமேஷ் டிகாசன் கலரில் அனைவரும் இருக்கும் 'டி' பிரிவுக்கும் சென்றான்.
தொன்று தொட்டு வளர்த்து வந்த கடைசி இருக்கையை தேடி என் கால்கள் சென்றன. என் கண்கள் அடுத்த ஆறு மாதங்களை குளிரூட்ட காத்திருபவர்களை தேடி சொல்லாமல் சென்றது. ஆப்பில், மா , பலா என்று அத்தனை கனிகளும் கடைசியில் இருப்பவர்களுக்கே என்று கடவுள் கொடுத்த வரமாய் எல்லோரும் என் வகுப்பில் இருந்தார்கள் . கண்கள் குளிருந்து கொண்டிருக்க ஒரு பெருத்த உருவம் என்னை மறைத்தது. " ஹை ஆய் எம் ஸ்வர்ணா" என்றது அவ் உருவம் . என் பதிலை எதிர்பார்க்கும் முன் என் அருகில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தது ( அன்று ஆரம்பித்த பேச்சு நான்கு ஆண்டுகள் நிற்கவே இல்லை ) . ச்வர்ணவிடம் ஒரு விசேஷம் உண்டு. எவன் பக்கத்தில் இருக்கிறான் என்று பாக்கமாடன். மொக்கை பொட ஆரம்பித்தால் அருகில் இருப்பன் அப்பாடா என ஓடிவிடுவார்கள் . அந்த நிலைமை எனக்கு முதல் நாளே வந்தது. சரி வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தேன் . ஈ வகுப்பு பிரிவினர் கும்பலாக வெளிய நின்றுகொண்டிருந்தனர் . எல்லோரும் மாக்கானை தெரிந்தார்கள் ( என்னை மாதிரியே ).
கல்லூரியை சுற்றி காண்பிக்க சில பெருசுகள் வந்தன. தாஜ் மகாலை கூட அவ்ளோ பெருமையாய் எவனும் சொல்லி இருக்க மாட்டான். ஓர் ஆயுரம் முறை "வி ஆர் தி பெஸ்ட் இன் சவுத் தமிழ்நாடு நெக்ஸ்ட் டு மேப்கோ " என்று கூவி கொண்டே வந்தார்கள். செம மொக்க டா சாமி என நினைக்கும் பொது அருகில் வந்தது அதே உருவம். "ஹை மீ சுப்பிரமணி மெக்கானிகல் , இப்போ நாம என்ன பன்னபோறோம் " என்று அருகில் வந்தான். என்னடா இது சற்று முன்பு தான் வந்து வேற ஒரு பெயர் சொன்னான் , அதுக்குள்ள இவன் பெயர மறந்த்துட்டனா என கேள்வி எழுந்தது. சட்று உற்று நோக்கிய பின் முன்னால் பார்த்த உருவம் உருளை உடம்பும் தக்காளி தலையும் கொண்டிருந்தான் , இவனுக்கு தக்காளி உடம்பும் உருளை தலையும் இருந்தது. அனால் வாய் மட்டும் இருவருக்கும் காது வரை இருந்தது . சரி தான் என்று திரும்பிய போது , கல்லூரியை சுற்றி காண்பிக்க வந்த பெருசுகளிடம் ஒருவன் கேள்வி கேட்டு கொண்டிருந்தான். வாழக்காய் பஜ்ஜி அரவேக்காடாய் எடுத்தவன் போல் இருந்தான். இப்போவே இவன் இவ்ளோ கேட்கிறானே இவன் நம்மை என்ன பாடு படுத்த போறனோ என்று பப்ப்சை வாயிற் மொக்கிகொன்று கிளம்பியது அந்த பெருசு. அடுத்ததாக சில அபூர்வ மனிதர்களையும் சந்தித்தேன். விளக்கமார் குச்சிக்கு சட்டை போட்ட சுதாகர் , பார்த்தாலே பலம் என தெரியும் கே சுப்பிரமணி , வாயால் வடை சுடும் வசந்த் , வேலு , மற்றும் சிலரை முதல் நாள் சந்தித்தேன் . அடுத்த நான்கு வருடங்கள் மெக்கானிகல் எடுத்ததால், நான் இங்கே என் மெக்கானிகல் நண்பர்களை பற்றி எழுதியதோடு என் அருமை தோழிகள் பற்றியும் சிறுது எழுதுகிறேன். ரம்பா, ஊர்வசி , மேனகய் என என் வகுப்பிலும் மூன்று தோழிகள் இருந்தார்கள் . யாரை பார்ப்பது , யாரை விடுவது என ஒரு போராட்டமே ஓடியது என் மனதில். போராட்டத்தின் தீர்வாய் சரி நாளுக்கு ஒருமுறை மூன்றாக பிரித்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். சுமா, உதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்று தோழிகளும் அங்கே இருந்தார்கள். அவர்களை போல் எமகாதிகள் ஊரில் யாரும் இல்லை என்று பின் ஒரு நாளில் நண்பன் ஒருவன் சொன்னான். பார்பதற்கு மட்டும் கிராமத்து மங்கையராய் குனிந்த தலை நிமிராமல் இருந்தனர்.
என்னும் சில காதபாதிரத்தை நான் பிறகு அறிமுகம் செய்கிறேன். இப்பொழுது கல்லூரி தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர் . எட்டில் சனி என்று ஜோசியன் சொன்னது போலவே இருந்தது . உள்ளே ஒருவன் இருந்தான். அவன் என் அழகில் பாதி இருந்தான். அனால் குள்ளநரி வேலையில் என்னை விட இரண்டு மடங்கு செய்திருந்தான் . முந்தைய நாள் இரவே வந்து மட்டமான கட்டில் மூன்றில் சுமாரான கட்டிலை அவனுக்கு அவன் நண்பனுக்ம் முன் வசதி செய்து விட்டான் . இரும்பா தகரமா என்று தெரியாத கட்டிலை எனக்கு கொடுத்து நண்பா இது உனக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ என்றான் . அதாவது பரவாவில்லை, அங்கே பொருள் வைக்க நான்கு தட்டுகள் இருந்தன. அதில் மூன்றை அவர்கள் எடுத்து , நான்காவதையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக எனக்கு ஒரு ஓரம் கொடுத்தார்கள். அதில் என் பொருளை வைபதற்கு நான் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் செல்ல வேண்டும். அவன் நண்பனும் அவனும் ஒரே ஊரில் படிதவர்கலம் . பள்ளி நாட்களில் இருந்தே அவனை எமத்ருவது எனக்கு ஒரு ஹாபி என்று பெருமை அடித்தான். சுப்பி என்று அவனை அறிமுகம் செய்தான் சரி டா கப்பி என்று எல்லாம் ஏன் தலை விதி என அவனுடன் கை குலிக்கு கொன்டு வெளியே வந்தேன்.
விடுதி நட்பு விடாது கருப்பு என்பார்கள் . அதே போல் விடுதியில் நான் சந்தித்த சிவா , பழனி , அமித் , முத்து , சௌரப் ,ஷ்யாம் , நீண்ட கால நண்பர்கள் பின்னாளில் ஆனார்கள் . இந்த ஷ்யாம் சண்டாளன் பற்றி நான் சொல்ல வேண்டும் . அவனை முதல் முதல் சந்தித்த போதே ஒரு பெரும் கூடம் போட்டிருந்தான். ஆளை பார்பதற்கு தமிழ் நாடகங்களில் வரும் குண்டு ஆர்த்திக்கு பேன்ட் சட்டை போட்ட மாதிரி இருந்தான். "இனொரு அப்பளம் தர்மாட்டேன்க்ரால் , தயிர் தட்லே கொடுக்க மாட்டேன்க்ரால் " என கூட்டம் கூடிக்கொண்டு விடுதி காப்பாளர் களிடம் சண்டை போட்டு கொண்டிருந்தான் . அவனை பார்த்ததும் எனக்கு தமிழ் நாடகங்களில் வரும் குண்டு ஆர்த்திக்கு சட்டை பேன்ட் போட்ட மாதிரி இருந்தான். ரவி " இவனை பார்த்த இந்த காலேஜுக்கு என்னொரு அப்பளம் சாப்பிட தான் வந்துர்கானோ நு தோணுது டா " என்று கடிந்தான் . சரி சாப்பிடலாம் என சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பினோம் . அந்த நான்காம் என் அறையை கடக்கும் போது மட்டும் செம கப்பு அடித்தது. அதற்கான கரணம் அப்போது விளங்கவில்லை .
விடுதியில் பகடி வதை ( ராக்கிங் ) இருப்பாதால் ரவி அன்று உச்சா கூட செல்லவில்லை. கழிப்பறை வரை சென்று அங்கே ஒரு கருங் கொரங்கு நிற்பதாகவும் அதனால் இன்று எச்சை துப்பி சமாளித்து கொல்வதாகவும் முடிவெடுத்து விட்டான் . நான் பகடி வதை எப்படி இருக்கும் என பார்க்க ஆர்வம் தூண்டியது . வீரனாக அங்கு சென்று வீண் வம்பை விலைக்கு வாங்கினேன் . சுமார் ஒரு மணி நேரம் நன்றாக பிழிந்தார்கள் . என்னை காப்பாத்த எந்த இழிச்சவயனாவது வரமாட்டான என பார்த்தபோது , காலை நான் பார்த்த லொட லொட பய்யன் வந்தான். அவன் வந்ததும் என்னை விட்டுவிட்டார்கள் . அவன் பெயர் விக்ரம் . பின்னர் தான் தெரிந்தது அம்பலவாணர் ஒரு வாரத்துக்கு முன்னரே வந்து இங்கே அடி வாங்கி கொண்டிருக்கிறான் என்று. அன்று என்னை காப்பதியவன் தான் இன்று வரை எந்த பிரச்சனை வந்தாலும் பலி அவன் மேல் போட்டு சுலபமாய் தப்பிக்க வழி செய்யும் ஒரு அறிவுள்ள ஆர்வக் கோளாறு எனக்கு கிடைத்தான் என்று . அறைக்கு வந்து தகர கட்டிலில் தலை சாய்த்தேன். என்னும் என் வாழ்வில் சந்திக்காத சில மனிதர்களால் ( ஷேக் , சுளை , மதன் , தம்பு , பாலாஜி , தவசி , ரெங்கா , டோனி , முகெர்ஜி , அன்பு , கோழி , லிவி , ராம் , ஜுடு , சீனி .....) நான் அன்று நிதானம் ஆக தூங்க முடிந்தது .
3 comments:
Nalla tamil.. awating for mamsss..
கல்லூரி விடுதிக்கு முதல் நாளே வந்த நானும் என் நண்பன் சுப்பியும் நல்ல கட்டிலை செலக்ட் செய்து எடுதுகொண்டோம். மொக்க கண்டிஷன்இல் இருந்த அந்த கட்டிலை அடுத்த நாள் வந்த சிவாவிற்கு தள்ளிவிட்டோம். அதை பற்றி அப்போது சிவா என்ன நினைத்தான் என்பதை பத்து வருடங்கள் கழித்து இப்போது தான் எனக்கு தெரிகிறது ! சாரி நண்பா. ஆனால் அந்த கட்டிலில் வேண்டும் என்றே அடிக்கடி புரண்டு நீ எழுப்பிய சப்தத்தினால் நாங்கள் அல்லவே நொந்தது போனோம்!
சிவா வராத முதல் நாள் இரவு நான் சுப்பியிடம் கூறினேன் - " அந்த மூணாவது ரூம் மேட் வராமலே போய்டா ரொம்ப நல்லது... நாம மட்டும் இருக்கலாம்" அதற்கு என் அருமை நண்பன் சுப்பி கூறியது -" இல்லை அவன் வரட்டும். யாருக்கு தெரியும், அவன் நல்லவனாக இருந்து நமக்கு Best Friend ஆஹ ஆஹாலம்!" தீர்க்க தரிசிடா சுப்பி நீ!
Fantastic Machi, Siva neeya ipadi? "Kadhalithu paarungal
kalusadaium Kathai yealuthuvan" nu solluvanga. But Nee Nirupichuta machan.
Post a Comment