Saturday, March 17, 2012

தறிகெட்டு திரிந்த இரண்டாம் பருவம்



புதிய மனிதர்கள் புரியாத பிதர்கள் குளிர்ந்த நெஞ்சங்கள் குனியாத பண்ணிகுட்டிகள்  என்று முட்ட போண்டாய்  கூட்டத்துடன் கீர வடையாய் மெக்கானிகல் கூட்டத்தில்  ஐக்கியம் ஆனேன். சஹாரா பாலை வனத்தை விட அப்படியோர் வறட்சி இந்த கூட்டம் . அப்படி இருக்க சாக்கடையில் கலக்கும் கழிவு நீராய்  , எருமை கூட்டத்தில் இருக்கும் கழுதையாய் எங்கள் கூட்டத்திலும்  குத்துவிளக்கு ஒன்று வந்து  சேர்ந்தது . பட்சி ஆறு மாதத்துக்கு முன்னவே களவாடபட்டும் அது தெரியமால் அவளை சுற்றி  ஒரு குள்ள நரி கூட்டம் எப்போதும் வட்டம் இட்டு கொண்டேயிருந்தது  . ரைடர் குரூப் என பெயர் பெற்ற  அந்த கும்பலின் தலைவன் அடங்காபிடாரி  அன்பு , அவளை யாரவது  பார்க்கும் போது அவளை விட அதிகமாக வேதனை படும் அஜக்கு , எங்கள் கல்லூரியின் குள்ள தனுஷ் அலெக்சாண்டர் மற்றும் புத்திசாலி முட்டாள் ரெங்கா . இவர்கள் எல்லாம் முன் வரிசையில் இருந்து அவளை காப்பற்றி கடமை ஆற்றிகொண்டிருந்தார்கள் . பின் வரிசையில் ரவி , செத்த ஸ்வர்ணா , நான் , மற்றும் ரோல்லர் இருந்தோம். எங்களோடு என்னொரு  ஒரு கூட்டம் ஒட்டிகொண்டது . என் பள்ளி நண்பன் கருவாடு ரமேஷ்ம் அவனோடு எங்கள் வகுப்பின் நான்கு ஆண்டுக்கு பிடித்த சனியன்  ஷெய்கும்  வந்து சேர்ந்தான். பார்த்தால் பக்ரித்துக்கு வளர்க்கும் ஆடு மாதிரி அமைதியாக இருந்தாலும் நான்கு வருடங்களில்  அவன் செய்த குற்றங்களை கணக்கு எடுத்தால் நமக்கு மயக்கம் வந்து விடும் . சி எஸ் ஈ , ஈ சி ஈ  ல லாம்  அறுபது தறுதலைகள்  இருந்தும்  சந்தோஷமா இருந்தாங்க. எங்க கிளாஸ்ல இவன் ஒருத்தன வச்சிகிட்டு  நாங்க பட்ட அவஸ்த இருக்கே அய்ய யை  யாய் யோவ்.சனி இவன் உடம்போடு ஒட்டிக்கொண்டு ஆட்டம் போட்டது. இவனால் எங்கள் வகுப்பிற்கு வந்த கேடு காலத்தை சிறிது மட்டும் சொல்கிறேன் நீங்களே புரிந்து கொள்வீர்கள் .  இரண்டாம் பருவ வகுப்பில்  சி மொழி ( சி லாங்க்வேஜ் ) ,  கணினி தாளின்  ஒரு பாடமாக இருந்தது. அதை எடுத்தது முண்டகன்ஈஸ்வரி கசந்தா கள்ளினாயகம். பார்த்தாலே கேவலமாய் இருப்பாள். இதில் அவள் முண்டகண்ணை சுழட்டினாள் என்றால் வாந்தியே வந்து விடும். அவள் ஒரு நாள் வழக்கம் போல பயங்கர கொடுரமாக பாடம் நடத்தி கொண்டிருந்தாள். கடமையே கண்ணாய் நாங்கள் கதை பேசி கொண்டிருக்க , பேக்கு மட்டும் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தான். என்னடா இவ்ளோ நேரம் ஆகியும் பிரட்சன ஒன்னுமே காணுமேனு நாங்க யோசித்திருக்கையில்,  முண்டகன்ஈஸ்வரி  கேட்டால் ஒரு கேவலமான கேள்வி. மானிடருக்கும் சி பீ யூக்கும் வித்தியாசம் தெரியாத எங்களிடம்   "டூ எனி ஒன் க்நொவ் ஜாவா "-  உன் கிளாஸ்ல இருந்தா சாவுரது எப்படினா  தெரியும்  செத்தாலும் எங்களுக்கு ஜாவா தெரியாது என்று நான் முனுமுனுகையில் " ஐ  நோ ஜாவா மேடம் " என்றான் பேக்கு . பொட்ட கழுதய கூட கா மணி நேரம் மொரட்சி பாக்குற இந்த கப்பி பயலுக்கு  இவ்ளோ அறிவா என்று நாங்கள் வியந்து பார்க்கையில் , சற்றும் சலிக்காதவனாய்  " யு மீன் ஜாவா பைக் மேடம்,  ஐ ஹவ் சீன் தெம் இன் மூவீஸ் மேடம் . நய்ஸ் பைக் மேடம் ஐ  லைக் இட் வெரி மச் " என்று போட்டான் பாருங்க ஒரு மொக்கைய . அவ்ளோதான் வகுப்பு முழவதும் குபீர் என்று சிரித்தது. சாதாரண மொக்கை தான் , ஆனாலும் நாங்கள் இந்த மாறி நேரத்தில் நாங்கள் எங்களுக்குள் பேசிகொண்ட மொக்கைக்கும் சேர்த்து வைத்து சிரித்து விடுவோம் . இடி முழங்கும் படியாய் நாங்கள் சிரித்ததை பார்த்ததில் கடுப்பானது முண்டகன்ஈஸ் . " ஐ அப்ப்ரிசியட்  யுவர் சென்ஸ் ஒப் ஹுமர் . பட் நாட் இன் மி கிளாஸ் . சிச்டி பை ச்டுடேன்ட்சையும் லைன் ல நிப்பாட்டி ஒரே புல்லேட்ல சுட்டுபுடுவேன். மைன்ட் இட்  " என கடுப்படித்தது. நாங்க எல்லாம் அந்த மூஞ்சை பாக்காமல் மறு பக்கம் திரும்பி இருக்க  இந்த கப்பி மட்டும் . தேங்க்ஸ் மேடம் என சொல்லி அவளுக்கு சூடு ஏத்தினான்.  புல்லெட் ராணி அன்றில் இருந்து எங்களிடம் எதாவது தெரியுமா என்று கேட்டதே இல்லை.

வகுப்பில்தான்  நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால்  விடுதியில் அதை விட கொடுமையாய் இருந்தனர். ஒவ்வொரு அறையிலும் விசித்திர மனிதர்கள் இருந்தனர்.  அறை என் நான்கில் மூன்று  மூதாரிகள்  இருந்தனர்  மேலே நாம் பார்த்த ஷேய்க் , குசும்பாண்டி , பாவாடை அமித். இவர்களோடு நம் நெய் கூவும் சேர்ந்து கொள்வான். அந்த அறையில் எதாவது ஒரு போட்டி வைத்து கொண்டே இருப்பார்கள் . அன்றும் ஏதோ ஒரு கேவலமான போட்டி நடத்தி கொண்டிருந்தார்கள் . நமக்கு விசேஷ அழைப்பு வரவே உள்ளே சென்று எட்டி பார்த்தேன் . உள்ளுக்குள் செம துர்நாற்றம் வீசிகொண்டிருந்தது .எல்லோரும் பரபரப்பாய் காணப்பட்டனர். அன்று தான் இறுதி போட்டியாம். பாவாடை அமித்தும் நெய் கூவும் விளையாடிகொண்டிருந்தர்கள். குசும்பாண்டி நடுநிலையாளர் வேலை பார்த்துகொண்டிருந்தார். மச்சி இதுக்கு நீ நான்கு கொடுக்கலாம் , மச்சி இதுக்கு நீ சிக்ஸ் கொடுக்கணும்னு மாத்தி மாத்தி ஏதோ செய்துகொண்டே நெயும் பாவாடையும் சொன்னார்கள்.  ஷேய்க் மச்சி என்னும் ரெண்டு தான் ஹண்ட்ரட் போட்ரலாம் என்று கூவிகொண்டிருந்தான் ( என்கரேஜ் )  .  "டேய் என்னடா நடக்கது இங்க  எனக்கு ஒன்றும் புரியல ,  நாத்தம் மட்டும் ஏறி கொண்டே இருக்குது" என்று கேட்டேன். மச்சி ஒலிம்பிக்  கேம் விளையாடறோம்டா. யாரு அதிக வாயு வெளியேற்றுகிறார்கள் கேம் டா இது . என்னால நாற்பது தான் முடிஞ்சது பசங்க பின்னுறாங்க , பாவாடை செஞ்சுரி போடபோறான் ,  முடிஞ்சா நீயும் ரெண்டு போட்டிட்டு போ என்றான். எனக்கு வாந்தியே  வந்திடும் போல இருந்தது. கருமாந்திரம் பிடிச்சவங்க இந்த வாந்திய வச்சி  இதுக்கும் ஒரு விளையாட்டு ஆரம்பிச்சிடுவாங்கனு ஓட்டம் பிடித்தேன் . சத்தியமா இவங்கெல்லாம் உருபடவே மாட்டாங்க , உருப்படவே மாட்டாங்க என்று கோவத்தில் திட்டிகொண்டே சென்றேன்.

நாம் வகுப்பிற்கு மீண்டும் செல்வோம்.  ஒரு செம கதாபாத்திரத்தை அறிமுக படுத்துகிறேன். இந்த  தோழரை பாத்தா தமிழ் படத்தில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி பலமாய் இருப்பான். ஆனா அவன் பேசினான் என்றால்  கூவ ஆத்துல ஒன்னுக்கு போறவன் மாதிரி பேசுவான் . அவன் பேரே எனக்கு மறந்துபோச்சு . நண்பன் ரமேஷ் அவனுக்கு ஒன்னே முக்கானு பெயர் வச்சான்.  இந்த ரமேஷ் பய அவன வச்சி ஒரு லொள்ளு சபாவே நடத்தி வந்தான். அவ்ளோ அழகா அந்த பய்யன்  இருந்தும் அவனை ஒரு அஜக்கு போல ரமேஷ் மாற்றிவைத்திருந்தான். அவனுக்கு நேரம் போக வில்லை என்றால் அவ்ளோ தான் , ஒன்னே முக்காவை சீண்டி விடுவான்.  இப்படி அவனை உசுபேத்தி அவனை நம் மேனகை  ( எப் செக்சன் ) மேல் காதல் வரசெய்தான் .  அவள் ஏற்கனவே சப்பாத்தி மாவுக்கு சால்நாவாக இருப்பது தெரிந்தும் நம் காதல் ரோமியோ அவள் பின்னால் சென்று படம் போடுவான். அவனை அவள் சீண்ட கூட மாட்டாள். ரமேஷ் விடாபிடியாக அவனை மச்சி உனக்கு ஹிந்தி தெரியும்ல , நீ போய் ஹிந்தில கடலை போடு அவ கவுந்திடுவா  என ஏற்றிவிட்டான்.  அவனும் அவள் வகுப்பு முன்னால் ஒரு நாள் சென்று அவள் அருகில் வந்தவுடன் " ஏக் மினிட்  போல்காஜி  ( பெயர் மாற்றப்டுள்ளது ) "  என்று விம்மி விம்மி கூபிட்டான் . உலகத்தில் இருக்கும் அருவருப்பான ஒரு விஷயத்தை அவள் அப்போது பார்த்தமாதிரி அவனை பார்த்து விட்டு  எதிர்ப்புறமாக  திரும்பி சென்றாள் . அந்த கண்கொள்ளா காட்சியை  நேரில் பார்த்த ரமேஷ் பேரானந்தம் அடைந்தான். பரவச நிலையை அடைந்தான் என கூறலாம். அவன் முன்னாடி வந்து கூத்தாடினான் , கொண்டாடினான் . ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தான்  "ஏக் மினிட்  போல்காஜி ...உன்னை யாரோ ஒ**ஆ  ஜி "  என்று  அவனை  கிண்டல் செய்து தலை குனிய செய்தான். அன்று குனிந்தவன்  அவனால் மீண்டும் தூக்கவே முடியவில்லை - தலையை .

கடைசியாக ஒரு முறை நாம் விடுதிக்கு செல்வோம். இம்முறை நாம் இருபத்தி எட்டாம் அறைக்கு செல்லலாம். அந்த அறையில் நாம் முன்னே பார்த்த சர்தார்ஜி இருந்தார் . கூட இருந்தவர்  ஆர் எள் எஸ்  ( மூன்றாவது ஒரு அப்பாவி அவரை பின்பு பார்க்கலாம் ). அந்த அறையில் எப்பொழுதும்  அவர்கள் இருவரும்  சண்டையிட்டு கொண்டே  இருப்பார்கள். அன்று நான் போகும் போதும்  வழக்கம் போல் சண்டை போட்டு கொண்டிருந்தனர் . நமக்கு ஊர் வம்பு என்றால் நன்றாக பிடிக்கும் என்பதால் , இன்று நன்றாக ஏத்தி விட்டு ஒரு கலவரம் உண்டு பண்ணி இரத்தம் பாத்து விடலாம் என ஆர்வம் கூடிவிட்டது.  அன்றைய சண்டையின் காரணம் யாரால் அறை ஒழுங்காக  இல்லை .  சர்தார்ஜி,  எள் எஸ்இடம் உன் நண்பர்கள் வந்து தான் அறையை நாசம் செய்கிறார்கள் என்றான். பதிலுக்கு இவன் உன் நண்பர்குளுக்கு தான் ஒரு எழவும் தெரியாது நீ தான் கரணம் என கூறினான் . இவ்வாறு விவகாரம் சூடுபிடிக்க , யாரவது யாரையாவது அடிக்க மாட்டாங்களா  என ஆவலாய் பாத்திருக்க , சட்டேன்று அவர்கள் பார்வையில் நான் சிக்கினேன். எள் எஸ் என்னிடம் மச்சி நீ இப்போ யாரடா பாக்க வந்திருக்குற என்றான். நான் மச்சி உங்க ரெண்டு பேரையும் தாண்டா என்றேன். அவனோ விடாது  யாரவது ஒருத்தர சொல்லு மச்சி என்று அலறினான். சரி என்று நான் என் உயிர் தோழன் முக்கா ஜி யாய்  பார்க்க வந்திருக்றேன் என்றேன். நம்ம முக்கா ஜி  பசங்களுடன் பேசுவதில் தனி விருப்பம் காட்டமாட்டான் என்ற ஊரறிந்த விஷயத்தை நான் சற்று மறந்தே போனேன். இல்ல மச்சி  நம்ம முக்கியமான விஷயம்னா சாயந்தரம் பேசலாம். சாதாரன விஷயம்னா  நாளைக்கு பேசலாம்னு சொன்னான். அட கடன்காரா இவனெல்லாம் கல்லூரியிலே  காதல் பண்ணி அதே பொண்ண கல்யாணம் பண்ணி  ஜென்ம சித்ரவதை அனுபவிக்கணும்னு சாபம் விட்டுட்டு எள் எஸ் இடம் மச்சி சரி  உன்ன தான் பாக்க வந்தேன்னு சொன்னேன். உடனே மாப்ளை  இனி என்ன பாக்கணும்னா குளிச்சிட்டு , கால் எல்லாம் கழுவிட்டு சாயந்தரம் ஏழு டு எட்டு வா . அந்த டைம்ல நாம பேசலாம் என்றான். நான்  கோவிலுக்கு போனாலே  குளிக்கணுமானு யோசிப்பேன், இந்த பன்னாடைகள பார்கறதுக்கு நான் குளிச்சிட்டு வேற போகுனுமானு கோபமுற்று அதே சாபத்தை  அவனக்கும் கொடுத்திட்டு இடத்தை  காலிசெய்தேன்  ( என் சாபம் பலித்து அவர்கள் இருவரும் இப்போது ஜென்ம தண்டனை அடைந்திருகார்கள் என்பது ஒரு  மகிழ்சிகரமான செய்தி )  

கல்லூரி வாழ்கையின் சிறப்பான விஷயம் சுற்றுல்லா. அதுவும் மெக்கானிக்கல் சுற்றுல்லா என்றால் ஒரு தனித்துவம் இருக்கும். பெண்கள் இல்லாததால் எங்கே வேண்டும் என்றாலும் தங்கி கொள்ளலாம் எவ்வளவு நேரம் ஆனாலும் ஊர் சுத்தலாம் . அனால் பீக்காளி வாத்தியார்மார்கள் அதற்கு ஆப்பு அடித்தனர். மற்ற வகுப்பு எல்லாம் சுற்றுலா கெளம்ப , எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.  கடலை மட்டுமே வாழ்கைன்னு நினைக்கிற  சி எஸ் ஈ  பசங்க  கூட சுற்றுலா செல்ல கெளம்பி விட்டார்கள். சி எஸ் ஈ  நண்பன் செந்தில் என்னமோ சந்திரா மண்டலத்துக்கு  போகிற மாதிரி படம் ஓட்டினான் ( அவனுக்கு அவன் ஆளுடன் செல்வதால் அப்படியொரு சந்தோஷமாக கூட இருக்கலாம் ). என்ன செய்யலாம் என்று யோசித்த போது நம்ம ஷேய்க் வாழ்கையின் முதல் முறையாக ஒரு நல்ல யோசனை சொன்னான். நாம ஏன் மச்சி தனியா பிளான் பண்ணி போககூடாது என்று. சட்டேன்று தீர்மானித்து டக்கென்று முடிவெடுத்தோம். எங்கள் துறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நம் ஷேய்க் எப்படி ஊர் வம்பில் சிறந்தவர் என்பதால் இந்த வம்பை வாங்க அவர் ஐடியா கொடுத்தார் . அடுத்ததாக வண்டியை பற்றி வாய் கிழிய பேசும் ஸ்வர்ணாக்கு  வண்டி பதிவு செய்யும் பொறுப்பு ஒப்படைக்க பட்டது. ரவி திட்டத்தை பிரபலபடுத்தி ஆள் சேர்த்தான்.  சுற்றுலாவில் உல்லாசமாய் இருக்க ஒன்னே முக்காவை சேர்த்தோம்.  அடி தடிக்கு சாம் , வீட்டு சாப்பாடுக்கு டாடி ரமேஸ் . ஒட்டு வாங்குவதற்கு லிவியும் , கழுதையும் தானே வந்து சேர்ந்தனர். எல்லாம் இருந்தும் எங்கே செல்லலாம் என்று விஷயத்தை மறந்து விட்டோம். அப்பொழுது நண்பன் ரமேஸ் நம் செந்திலிடம் லாகுவாக பேசி ,  சி எஸ் ஈ போகும்  திட்டபடத்தை ( ப்ளான் ) ஆட்டை போட்டு எடுத்து வந்தான். எங்கள் வண்டி  திட்டபடி சி எஸ் செல்லும் எல்லா இடத்திற்கும் பத்து நிமிடம் முன்னரே சென்று , டேய் மச்சி என்னடா இங்கயும் வந்துடீங்க ,  ஏண்டா எங்கள் பின்னாடியே  வரீங்க , உங்க பொண்ணுங்க எங்களோட தான் வரணும்னு சொல்றாங்களா  என்று கேட்டு உசுப்புஏத்தினோம்  . பொண்ணுங்களை விட பசங்க எல்லோரும் கடுப்பாய் பாத்தது எங்களுக்கு ஒரு வித பெருமை உண்டாய்ற்று. வந்த இடத்தில் பிரச்சனை பண்ணாமல் போனால் நல்லா இருக்காது என்பதால் எதாவது பிரச்சனை வராத என்று தேடி கொண்டே சென்றோம் . நல்ல வேலையாக அங்கு சி எஸ் பசங்களை கூட்டிவந்த வாத்தியார்கள் குளித்து கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் உடனே குஷி அடைந்து அவர்கள் முன்னர் ஆட்டம் போட்டோம் அந்த ஒன்றை கண் வாத்தியானை வசை பாடினோம் , குட்டத்தில் தள்ளுவதை போல அவனை தள்ளி விட்டு பூரிப்பு அடைந்தோம். அந்த இரண்டு நாள் சுற்றுல்லா எங்களை ஒரு ரவ்டியாக மாற்ற கத்து கொடுத்தது.
சுற்றுலா முடிந்து வந்தவுடன் எங்கள் வாழ்கையின் முதல் வினவல் ( இன்குரி ) கூடத்திற்கு அழைப்பு வந்தது. நண்பன் பேக்கு அப்போ கூட மச்சி பிரட்சன பண்ணா பாதி ரௌடி பிரட்சன பண்ணி மாட்னா தான் முழு ரௌடி, போட்டுக்கோ மச்சி என கை தூக்கினான்.  எந்த கோவிலில் நான் செய்த புண்ணியமோ அன்று எங்களை எச்சரிக்கை மட்டும் செய்த அனுப்பினர். அனால் அன்றில் இருந்தே உலகம் எங்களை உற்று பார்க்க ஆரம்பித்தது. இரண்டாம் பருவம் முடிந்ததும் எங்களை மெக்கானிகல் கட்டடித்திற்கு அனுப்பிவிட்டனர். எங்களை பற்றி சிறு குறிப்புகளும் அதில் இருந்தது. மிச்செவியௌஸ்  பட்டியல்  என்று ஒன்று  அமைத்து அதில் எனது பெயர் முதலில் இருந்தது . என் நண்பன் செந்தில் இதை பார்த்து மச்சி உன்னை மிச்செவியௌஸ்  லிஸ்ட்ல சேத்துர்காங்க டா கலக்கு அப்படி என்றான் . அப்படினா என்னடா என்றேன் . தெர்ல மச்சி எதாவது நல்லா படிக்கிற பசங்க லிஸ்டா இருக்கும் டா என்றான். எனக்கு மிகவம் பெருமையாக இருந்தது.

மிச்செவியௌஸ் என்றால் விஷமம் நிறைந்தவன் என்பதும் , என்னை விட பல மடங்கு விஷமம் செய்யும் ஜந்துகளை  அடுத்த பருவத்தில்  பார்க்கபோகிறேன் என்பதை அறியாமல்  , வாயில் விஷம் வைத்து அலையும் ஒரு காட்டு பண்ணி எனக்கு அறை தோழனாகவும் எமதர்மனாகவும் வருவான் என்பததையும் தெரியாமல் அதை விட முக்கியமாக வாழ்கையில் ஒரு மனிதன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கு சிறந்து உதாரணமாய் ஒருவன் அந்த ஊர்லே இருக்கிறான் அவன் எங்கள் கல்லூரியில் சேர போகிறான் என வருந்தாமல்  மூன்றாம் பருவத்திற்கு காத்திருந்தேன் - நீங்களும் சற்று காத்திருங்கள் .

1 comment:

Kothand said...

கலக்ற மச்சி.உனக்குள்ள ஒரு எழுத்தாளன் இருக்கானா ???
Carry on... interesting